Wikipedia

Search results

Friday, April 27, 2018

கோழி குழம்பு செய்வது எப்படி?


கோழி குழம்பு


தேவையான பொருட்கள்

கோழி - 1 கிலோ
வெங்காயம் - 3
தக்காளி - 2
பூண்டு - 4 பல்
இஞ்சி - சிறிது
சீரகம் - 1 தேக்கரண்டி
மிளகு - 1/2 தேக்கரண்டி
தனியா - 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 10
தேங்காய் பால் - 1/2 கப்
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
கடலெண்ணய் - தேவையான அளவு


செய்யும் முறை:

* வெறும் வடச்சட்டியில் சீரகம், மிளகு, தனியா மற்றும் காய்ந்த மிளகாயை போட்டு நன்றாக வறுத்து கொள்ளவும்
* மிக்ஸ்யில் வறுத்த மசாலாவுடன், இஞ்சி பூண்டு மற்றும் தேங்காய்யோடு சிறிது நீர் விட்டு நன்றாக அரைத்து கொள்ளவும். * கடைசியில் அதில் பாதி கப் வெங்காயம் சேர்த்து ஒரு முறை மட்டும் மிக்ஸ்சியை சுற்றவும். அதாவது  வெங்காயத்தை அரைகுறையாக அரைத்துக் கொள்ளவேண்டும்
* பிரஷர் குக்கரில் கடலெண்ணய்  விட்டு அது காய்ந்ததும் மீதி இருக்கும் வெங்காயத்தை பொடியாக நறுக்கி அதில் போட்டு
* அது நன்றாக வதங்கியவுடன், மஞ்சள் தூள் சேர்த்து சுத்தம் செய்த  கோழியை அதில் போடவும்.
* அதில் சிறிது உப்பு சேர்த்து நன்றாக வதக்கி பின் அதில் தக்காளி மற்றும் அரைத்து வைத்துள்ள மசாலாவை போட்டு சிறிது நீர் சேர்த்து மூடி, மூன்று விசில் வைக்கவும். 
* குக்கரை திறந்து உப்பு, காரம் சரி பார்த்து, கோழி கறி நன்றாக வெந்து விட்டதா என்று பார்க்க வேண்டும் இல்லையென்றால் திரும்ப மூடி தேவையான அளவு விசில் வைக்கவும். 
* சுவையான கோழிக் குழம்பு தயார்.

காராமணி கத்திரிக்காய் குழம்பு செய்வது எப்படி?

காராமணி கத்திரிக்காய் குழம்பு

தேவையான பொருள்கள் :

காராமணி (தட்டப்பயறு)   - 100 கிராம்
வெங்காயம்              -  2
தக்காளி                 -  1
கத்தரிக்காய்             -  3
பூண்டு                  -   4 பல்
மிளகாய்த் தூள்          -  2 தேக்கரண்டி
மஞ்சள் தூள்,            -  1/4 தேக்கரண்டி 
சோம்பு,                  - 1/4 தேக்கரண்டி
சீரகத்தூள்                1/4 தேக்கரண்டி
புளி                     -  எலுமிச்சை அளவு
உப்பு                      -  தேவையான அளவு
எண்ணெய்                 -  2 தேக்கரண்டி
கடுகு,                     -  1/4 தேக்கரண்டி
சீரகம்                      1/4 தேக்கரண்டி
வெந்தயம்                  1/2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய்          -   2
தேங்காய் விழுது           -  2 தேக்கரண்டி
கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலை தேவைக்கேற்ப


செய்முறை;

* முளைகட்டிய காராமணியுடன் தண்ணீர் சேர்த்து குக்கரில் இரண்டு விசில் வேக வைக்கவும். 

* வெந்தவுடன் அதில் நறுக்கிய வெங்காயம், தக்காளி, கத்தரிக்காய், பூண்டு சேர்த்து வேக வைக்கவும். 

* வெந்ததும் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், சோம்பு, சீரகத் தூள் மற்றும் புளிக் கரைசலை ஊற்றி, உப்பு போட்டு கொதிக்கவிடவும்.
.
* குழம்பு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, சீரகம், வெந்தயம், காய்ந்த மிளகாய் தாளித்து குழம்பில் சேர்க்கவும்

* தேங்காய் அரைத்து ஊற்றி கொதிக்கவிட்டு இறக்கவும். 

* சுவையான காராமணி குழம்பு தயார்

* கொத்தமல்லித் தழை சேர்த்தால் வாசனைக் கூடும்

சுக்கு குழம்பு செய்வது எப்படி?

சுக்கு குழம்பு

தேவையான பொருட்கள் : 

சுக்கு                -   சிறிய துண்டு, 
மிளகு               -   ஒரு தேக்கரண்டி
திப்பிலி             -   3, 
புளி                 -   சிறிய எலுமிக்சை அளவு
வெங்காயம்          -  4, 
பூண்டு               -  10 பல், 
சாம்பார் பொடி       -  ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை       -  சிறிதளவு, 
கடுகு                 1/4, தேக்கரண்டி
உடைத்த உளுந்து    –  1/4 தேக்கரண்டி
வெந்தயம்            - 1/4, தேக்கரண்டி
தண்ணீர்              -     தேவையான அளவு

தாளிக்க வேண்டிய பொருட்கள் :
மஞ்சள் தூள், நல்லெண்ணெய், உப்பு

செய்முறை :

* வெங்காயம், பூண்டு, தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

* புளியை கரைத்து வைத்துக் கொள்ளவும். 

* பிறகு வாணலியில் சுக்கு, மிளகு, திப்பிலி சேர்த்து வறுத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். 

* ஐந்து நிமிடம் கழித்து அதனுடன் சறிது வெங்காயத்தையும், 5 பூண்டையும் சேர்த்து விழுதாக அரைத்து எடுக்கவும். 

* வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உடைத்த உளுத்தம் பருப்பு, வெந்தயம் சேர்த்து தாளித்து மீதமுள்ள வெங்காயம், பூண்டு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். 

* பிறகு புளிக்கரைசல், உப்பு சேர்த்து கொதிக்க விடவும். 

* புளி பச்சை வாசனை போன பிறகு அரைத்த விழுது, சேர்த்து கொதிக்க விடவும் 

* குழம்பு நன்கு கெட்டியான பிறகு இறக்கி சூடான சாதத்துடன் பரிமாறவும்.
  
* இப்பொழுது சுவையான, உரப்பான சுக்கு குழம்பு தயார்.

முட்டை குழம்பு செய்வது எப்படி?


முட்டை குழம்பு

தேவையான பொருட்கள்

முட்டை                         4 (ஒரு கப்பில் அடித்து வைத்துக் கொள்ளவும்)
வெங்காயம்                    3
தக்காளி                             2
இஞ்சி                   -      1 துண்டு
பூண்டு                        6
புளி                     -   சிறிய எலுமிக்சை அளவு
சோம்பு                  -     1 தேக்கரண்டி
மிளகாய் தூள்                 -     2 தேக்கரண்டி
மஞ்சள்தூள்                        1 தேக்கரண்டி
மல்லித் தூள்                      2 தேக்கரண்டி
உப்பு                                        -     தேவையான அளவு                          
எண்ணெய்                   -      தேவையான அளவு
தண்ணீர்                          2 கப்
கறிவேப்பிலை                 1 கொத்து


செய்முறை

* ஒரு வாணலியில் எண்ணெய் சேர்த்து ஒரு நிமிடம் சூடாக்கவும்

* இதில் சோம்பு சேர்த்து ஒரு நிமிடம் வ‌றுக்கவும்.

* சிறிதாக வெட்டிய வெங்காயத்தையும், உப்பையும் சேர்த்து

* வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும் (சுமார் 20 முதல் 30 நிமிடங்கள் வதக்கவும்) .

* அரைத்த இஞ்சி, பூண்டு, விழுதையும், பச்சை மிளகாயும், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

* மிளகாய் தூள், மஞ்சள் தூள், கொத்தமல்லி தூள், ஒரு நிமிடம் வதக்கவும். 

* நறுக்கிய தக்காளி சேர்த்து, தக்காளி நன்கு மசியும் வரை வதக்கவும். 

* புளி தண்ணீர் சேர்த்து, உப்பு சரிபார்த்து 10 நிமிடங்கள் மூடி வைக்கவும்.

* நங்கு கொதித்தவுடன் அடிது வைத்த முட்டையை ஊற்றி இரண்டு நிமிடம் கழித்து ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்து இறக்கி விடவும்.

* இப்பொழுது சுவையான  முட்டை குழம்பு தயார்.