பயித்தம் பருப்பு சாம்பார்
தேவையான
பொருட்கள்
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
பூண்டு - 4
மஞ்சள் தூள் - 3 சிட்டிகை
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 3 சிட்டிகை
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
துவரம் பருப்பு – 100
கிராம்
பயித்தம் பருப்பு –
50 கிராம்
சிவப்பு மிளகாய் – 2
கடுகு,
உடைத்த உளுந்து, கருவேப்பிலை,
சிறிதளவு எடுத்துக்கொள்ளவும்.
செய்யும் முறை
* முதலில் ஊறவைத்த துவரம்
பருப்பையும், பயித்தம் பருப்பையும் குக்கரில் 3
- 4 விசில் போட்டு வேகவைத்துக்
கொள்ளவேண்டும்.
* பிறகு வெங்காயம் ,தக்காளி மற்றும் பச்சை மிளகாய் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
* பின்பு பூண்டை நசுக்கி வைத்துக் கொள்ளவும். (மிக்ஸியில்
அரைக்க வேண்டாம்).
* பின்பு
ஒரு குழம்பு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, உடைத்த
உளுந்து, காய்ந்த மிளகாய், கருவேப்பிலை போட்டு தாளித்து
கொள்ளவும் வேண்டும்.
* தாளித்த பின்பு அதில் பச்சை மிளகாயும், வெங்காயத்தையும்
போட்டு நன்கு வதக்கிக் கொள்ளவும்.
* வதக்கிய பின்பு அதில் நசுக்கி வைத்த பூண்டு விழுது மற்றும் தக்காளியை போட்டு
வதக்கிக் கொள்ளவும்.
* வதக்கிய
பின்பு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் , உப்பு
சேர்த்து மற்றும்
வேகவைத்த பருப்பை ஊற்றி இரண்டு நிமிடம்
கொதிக்க விட்டு இறக்கவும். பயித்தம் பருப்பு சாம்பார் தயார்.
No comments:
Post a Comment