கோழி குழம்பு
தேவையான
பொருட்கள்
கோழி
- 1 கிலோ
வெங்காயம்
- 3
தக்காளி
- 2
பூண்டு
- 4 பல்
இஞ்சி
- சிறிது
சீரகம்
- 1 தேக்கரண்டி
மிளகு
- 1/2 தேக்கரண்டி
தனியா - 1 தேக்கரண்டி
காய்ந்த
மிளகாய் - 10
தேங்காய்
பால் - 1/2 கப்
மஞ்சள்
தூள் - 1 தேக்கரண்டி
கடலெண்ணய்
- தேவையான அளவு
செய்யும் முறை:
* வெறும்
வடச்சட்டியில் சீரகம், மிளகு, தனியா மற்றும் காய்ந்த மிளகாயை போட்டு நன்றாக
வறுத்து கொள்ளவும்.
* மிக்ஸ்யில் வறுத்த மசாலாவுடன், இஞ்சி
பூண்டு மற்றும் தேங்காய்யோடு சிறிது நீர் விட்டு நன்றாக அரைத்து கொள்ளவும். * கடைசியில்
அதில் பாதி கப் வெங்காயம் சேர்த்து ஒரு முறை மட்டும் மிக்ஸ்சியை சுற்றவும். அதாவது வெங்காயத்தை அரைகுறையாக அரைத்துக் கொள்ளவேண்டும்.
* பிரஷர்
குக்கரில் கடலெண்ணய்
விட்டு அது காய்ந்ததும் மீதி இருக்கும் வெங்காயத்தை பொடியாக நறுக்கி அதில் போட்டு,
* அது
நன்றாக வதங்கியவுடன், மஞ்சள் தூள் சேர்த்து சுத்தம் செய்த கோழியை அதில் போடவும்.
* அதில்
சிறிது உப்பு சேர்த்து நன்றாக வதக்கி பின் அதில் தக்காளி மற்றும் அரைத்து
வைத்துள்ள மசாலாவை போட்டு சிறிது நீர் சேர்த்து மூடி, மூன்று விசில் வைக்கவும்.
* குக்கரை திறந்து உப்பு, காரம்
சரி பார்த்து, கோழி கறி நன்றாக வெந்து விட்டதா என்று பார்க்க வேண்டும்
இல்லையென்றால் திரும்ப மூடி தேவையான அளவு விசில் வைக்கவும்.
* சுவையான கோழிக் குழம்பு தயார்.
No comments:
Post a Comment