Wikipedia

Search results

Friday, April 27, 2018

இறால் மிளகு குழம்பு செய்வது எப்படி?

                  இறால் மிளகு குழம்பு


தேவையான பொருட்கள்

இறால்              -     500 கிராம்
பூண்டு
                -      10 பல்
பெரிய வெங்காயம்
     -      3
தக்காளி
               -     4
புளி
                   -     பெரிய எலுமிச்சை அளவு
சீரகத்தூள்
             -     1 தேக்கரண்டி
மஞ்சள்தூள்
            -     1 தேக்கரண்டி
மிளகாய்த்தூள்
         -     1 தேக்கரண்டி
மல்லித்தூள்    
       -     1 தேக்கரண்டி
கறிவேப்பிலை
         -     தேவையான அளவு
கொத்தமல்லி
         -     தேவையான அளவு
நல்லெண்ணெய்
         -     2 தேக்கரண்டி
மிளகுத்தூள்               -     2 தேக்கரண்டி

கடுகு, உடைத்த உளுந்து, சீரகம், வெந்தயம்
  சிறிதளவு



செய்யும் முறை :-


*முதலில் இறாலை குடல் நீக்கி நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

* பிறகு வெங்காயம், பூண்டு, தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். 

* பிறகு குழம்பு சட்டியில் நல்லெண்ணெய்யை  ஊற்றி கடுகு, உடைத்த உளுந்து, சீரகம்கறிவேப்பிலை, வெந்தயம் சேர்த்து வதக்கவும்.

* பிறகு பூண்டு மற்றும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

* பின் சீரகத்தூளை சேர்க்கவும். 

* ஐந்து நிமிடம் வதக்கிய பிறகு நறுக்கிய தக்காளியையும் கழுவிய இறாலையும் சேர்த்து  ஐந்து நிமிடம் வதக்க வேண்டும்.  பின்பு மிளகாய்த்தூள், மல்லித்தூள்,, தேவையான அளவு கரைத்த புளித் தண்ணீரை சேர்த்து மேலும் இருபது  நிமிடம் சட்டியை மூடி கொதிக்க வைக்கவும்.

* இறுதியாக மிளகுத்தூளை தூவவும்.

* பிறகு இரண்டு நிமிடம் கழித்து சட்டியை இறக்கி வைக்கவும்.

* வாசனை கூடவும், அலங்கரிக்கவும், கொத்துமல்லி இதழ்களை தூவவும்..

* இப்பொழுது சுவையான  இறால் மிளகு குழம்பு தயார். 

இதை நீங்கள் காலை சிற்றுண்டியுடன் (இட்லி, தோசை, இட்டியாப்பம்) சேர்த்தும், மதிய உணவு சாப்பாட்டிலும் கலந்தும் சாப்பிடலாம். மிகவும் ருசியாக இருக்கும்.
இறால் மிளகு குழம்பு உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. குழந்தைகளுக்கும் மிகவும் நல்லது. மிளகு மார்ச் சளியை கரைக்கும் குணம் உடையது

No comments:

Post a Comment