Wikipedia

Search results

Friday, April 27, 2018

மட்டன் குருமா குழம்பு செய்வது எப்படி?

             மட்டன் குருமா குழம்பு


           தேவையான பொருட்கள்
மட்டன்               -     ½ (அரைக்) கிலோ
பெரிய வெங்காயம்        இரண்டு
தக்காளி              -     இரண்டு
சின்ன வெங்காயம்    -     8
பூண்டு               -     10
இஞ்சி                -     ஒரு துண்டு
தேங்காய்             -     1/2 முடி 

அரைக்க வேண்டிய பொருட்கள் :

தேங்காய்             -     ஒரு கப் (அரைத் தேங்காய் )
மிளகாய்தூள்          -     2 தேக்கரண்டி (அல்லது காரத்திற்கேற்ப)
மல்லித் தூள்         -     4 தேக்கரண்டி
மஞ்சள் தூள்          -     5 சிட்டிகை
சோம்பு               -     ஒரு தேக்கரண்டி


தாளிக்க வேண்டிய பொருட்கள்:
கடலெண்ணெய் -     தேவைக்கு
சோம்பு          -     அரை தேக்கரண்டி
பட்டை          -     3 துண்டு
கிராம்பு         -     பத்து
கறிவேப்பிலை   -     ஒரு கொத்து


               செய்முறை
* முதலில் மட்டனை சுத்தமாக கழுவி குக்கரில் போட்டு நான்கு டம்ளர் தண்ணீர் ஊற்றி, ஒரு தேக்கரண்டி எண்ணெய், மஞ்சள் தூள் சிறிதளவு, மிளகாய் தூள் சிறிதுளவு, சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது அரைத்தது, உப்பு கொஞ்சம் சேர்த்து ஆறு விசில் வைத்து வேக வைக்கவும்.

*வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.


* குழம்பு பாத்திரத்தில் கடலெண்ணய்யை ஊற்றி காய்ந்ததும் தாளிக்கும் பொருட்களை (சோம்பு, பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை) போட்டு தாளிக்கவும்.

* அதில் நறுக்கிய பெரிய வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

* வதங்கியதும் தக்காளி, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

* நங்கு வதங்க்கியவுடன் அதில் வேக வைத்த கறி தண்ணீரை ஊற்றி பத்து நிமிடம் கொதிக்க விடவும். 

* பிறகு அரைத்த தேங்காய் விழுது, தாளித்த பொருளை சேர்த்து பச்சை வாசனை போக ஐந்து நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். (தேவைப்பட்டால் கொஞ்சம் தண்ணீரை சேர்த்து கொள்ளலாம் )

* இப்பொழுது சுவையான மட்டன் குருமா குழம்பு தயார்.

No comments:

Post a Comment