முட்டை குழம்பு
தேவையான பொருட்கள்
முட்டை – 4
(ஒரு கப்பில் அடித்து வைத்துக் கொள்ளவும்)
வெங்காயம்
– 3
தக்காளி – 2
இஞ்சி - 1 துண்டு
பூண்டு – 6
புளி - சிறிய எலுமிக்சை அளவு
சோம்பு - 1 தேக்கரண்டி
மிளகாய்
தூள் - 2
தேக்கரண்டி
மஞ்சள்தூள் – 1 தேக்கரண்டி
மல்லித்
தூள் – 2 தேக்கரண்டி
உப்பு
- தேவையான அளவு
எண்ணெய்
- தேவையான
அளவு
தண்ணீர்
– 2
கப்
கறிவேப்பிலை – 1
கொத்து
செய்முறை
* ஒரு
வாணலியில் எண்ணெய் சேர்த்து ஒரு நிமிடம் சூடாக்கவும்,
* இதில்
சோம்பு சேர்த்து ஒரு நிமிடம் வறுக்கவும்.
* சிறிதாக வெட்டிய வெங்காயத்தையும், உப்பையும்
சேர்த்து,
* வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும் (சுமார்
20 முதல் 30 நிமிடங்கள் வதக்கவும்) .
* அரைத்த இஞ்சி,
பூண்டு, விழுதையும்,
பச்சை மிளகாயும்,
கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
* மிளகாய் தூள்,
மஞ்சள் தூள், கொத்தமல்லி
தூள், ஒரு நிமிடம் வதக்கவும்.
* நறுக்கிய தக்காளி சேர்த்து, தக்காளி
நன்கு மசியும் வரை வதக்கவும்.
* புளி தண்ணீர் சேர்த்து, உப்பு
சரிபார்த்து 10 நிமிடங்கள் மூடி வைக்கவும்.
* நங்கு கொதித்தவுடன் அடிது வைத்த முட்டையை
ஊற்றி இரண்டு நிமிடம் கழித்து ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்து இறக்கி விடவும்.
* இப்பொழுது சுவையான முட்டை குழம்பு
தயார்.
No comments:
Post a Comment