சுவையான மொச்சை கறுவாட்டுக் குழம்பு
தேவையான
பொருட்கள்
கருவாடு - 4 துண்டுகள் (தேவைக்கேற்ப)
மொச்சை - 100
கிராம்
கத்திரிக்காய் - 4
பூண்டு - 10 பல்
பெரிய வெங்காயம் - 3
தக்காளி - 4
புளி - பெரிய எலுமிச்சை அளவு
சீரகத்தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள் - 1 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
மல்லித்தூள் - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - தேவையான அளவு
கொத்தமல்லி - தேவையான அளவு
நல்லெண்ணெய் - 1 தேக்கரண்டி
பூண்டு - 10 பல்
பெரிய வெங்காயம் - 3
தக்காளி - 4
புளி - பெரிய எலுமிச்சை அளவு
சீரகத்தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள் - 1 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
மல்லித்தூள் - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - தேவையான அளவு
கொத்தமல்லி - தேவையான அளவு
நல்லெண்ணெய் - 1 தேக்கரண்டி
மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
கடுகு, உடைத்த உளுந்து, சீரகம், சோம்பு, வெந்தயம் சிறிதளவு
கடுகு, உடைத்த உளுந்து, சீரகம், சோம்பு, வெந்தயம் சிறிதளவு
செய்யும் முறை :-
குறிப்பு :- முதலில் மொச்சையை நான்கு மணி நேரம் ஊர வைத்துக் கொள்ளவும்.
* முதலில்
கருவாடு துண்டுகளை கழுவி எடுத்துக்கொள்ள வேண்டும்.
* ஊரவைத்த மொச்சையை குக்கரில் இரண்டு
விசில் போட்டு வேகவைத்துக் கொள்ளவும்.
* கழுவிய கருவாடுகளை மஞ்சள்தூள், உப்பை கலந்து பத்து நிமிடம் ஊற வைக்கவும்.
* குழம்பு சட்டியில்
நல்லெண்ணெய்யை ஊற்றி கடுகு, உடைத்த உளுந்து,
சோம்பு, சீரகம், கறிவேப்பிலை,
வெந்தயம் சேர்த்து வதக்கவும்.
* பிறகு பூண்டு மற்றும் பொடியாக
நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
* பின்பு சீரகத்தூளை சேர்க்கவும்.
* துண்டாக
நறுக்கிய கத்திரிக்காயை போட்டு வதக்கவும்.
* வேகவைத்த மொச்சையை அதில் போடவும்.
* பிறகு
கருவாடு துண்டுகளை போட்டு வதக்கவும்.
* ஐந்து நிமிடம் வதக்கிய பிறகு நறுக்கிய
தக்காளியையும் சேர்த்து வதக்கி பத்து நிமிடம்
கொதிக்க விட வேண்டும்.
* பின்பு
மிளகாய்த்தூள், மல்லித்தூள்,, தேவையான
அளவு கரைத்த புளித் தண்ணீரை சேர்த்து மேலும் இருபது நிமிடம் சட்டியை மூடி கொதிக்க வைக்கவும்.
* தேவையான
அளவு உப்பை போடவும்.
* இறுதியாக மிளகுத்தூளை தூவவும்.
* பிறகு இரண்டு நிமிடம் கழித்து
சட்டியை இறக்கி வைக்கவும்.
* வாசனை கூடவும், அலங்கரிக்கவும் கொத்துமல்லி இதழ்களை தூவவும்.
* இப்பொழுது
சுவையான கருவாட்டு குழம்பு தயார்.
இதை
நீங்கள் காலை சிற்றுண்டியுடன் (இட்லி, தோசை)
சேர்த்தும், மதிய உணவு சாப்பாட்டிலும் கலந்தும் சாப்பிடலாம். மிகவும் ருசியாக
இருக்கும். கருவாடு குழம்பை சாதத்துடன் சேர்த்து அதனுடன் முட்டை ஆம்ப்லைட்டும்
வைத்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
உடலுக்கு மிகவும் ஏற்றது, சளி இருமலுக்கு மிகவும் நல்லது
சில
பெண்களுக்கு கருவாடு குழம்பு செய்வது எப்படி என்பது தெரியாது. இந்த குறிப்பு
அவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். பெண்கள் இதை செய்து தனது மாமியார்களை
அசத்தலாம்.
No comments:
Post a Comment