Wikipedia

Search results

Friday, April 27, 2018

காரப்பொடிமீன் குழம்பு செய்வது எப்படி?


சுவையான காரப்பொடிமீன் குழம்பு


தேவையான பொருட்கள்

காரப்பொடிமீன்          -     7 துண்டுகள் (தேவைக்கேற்ப)
பூண்டு
                 -      15 பல்
பெரிய வெங்காயம்
     -      3
தக்காளி
                 -     4
புளி
                     -     பெரிய  எலுமிச்சை அளவு
சீரகத்தூள்
               -     1 தேக்கரண்டி
மஞ்சள்தூள்
             -     1 தேக்கரண்டி
மிளகாய்த்தூள்
          -     1 தேக்கரண்டி
மல்லித்தூள்    
       -     1 தேக்கரண்டி
கறிவேப்பிலை
          -     தேவையான அளவு
கொத்தமல்லி
           -     தேவையான அளவு
நல்லெண்ணெய்
         -     1 தேக்கரண்டி
மிளகுத்தூள்            -     1 தேக்கரண்டி
கடுகு, உடைத்த உளுந்து, சீரகம், சோம்பு, வெந்தயம்
  சிறிதளவு 




செய்யும் முறை :-

* முதலில் மீன்களை ஆய்ந்து, கழுவி எடுத்துக்கொள்ள வேண்டும்.

* கழுவிய மீன்களை மஞ்சள்தூள், உப்பை கலந்து பதினைந்து  நிமிடம் ஊற வைக்கவும்.

* குழம்பு சட்டியில் நல்லெண்ணெய்யை  ஊற்றி கடுகு, உடைத்த உளுந்து, சோம்பு, சீரகம்,  கறிவேப்பிலை, வெந்தயம் சேர்த்து வதக்கவும்.

* பிறகு பூண்டு மற்றும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

*பின் சீரகத்தூளை சேர்க்கவும். ஐந்து நிமிடம் வதக்கிய பிறகு நறுக்கிய தக்காளியையும் சேர்த்து வதக்கி பத்து  நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

பின்பு மிளகாய்த்தூள், மல்லித்தூள்,, தேவையான அளவு கரைத்த புளித் தண்ணீரை சேர்த்து மேலும் இருபது  நிமிடம் சட்டியை மூடி கொதிக்க வைக்கவும்.

* பிறகு மீன்களை அதில் கொதித்துக் கொண்டிருக்கும் குழம்பில் போடவும். போட்டவுடன் இறுதியாக மிளகுத்தூளை தூவவும்.

* பிறகு இரண்டு நிமிடம் கழித்து சட்டியை இறக்கி வைக்கவும்.

* வாசனை கூடவும், அலங்கரிக்கவும்  கொத்துமல்லி இதழ்களை தூவவும்.


 இப்பொழுது சுவையான  காரப்பொடிமீன் குழம்பு தயார். இதை நீங்கள் காலை சிற்றுண்டியுடன் (இட்லி, தோசை, இட்டியாப்பம்) சேர்த்தும், மதிய உணவு சாப்பாட்டிலும் கலந்தும் சாப்பிடலாம். மிகவும் ருசியாக இருக்கும்.
காரப்பொடி மீன் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. நாட்பட்ட சளீத் தொல்லை நீங்கும். குழந்தைகளுக்கும் மிகவும் நல்லது. மார்ச் சளியை கரைக்கும் குணம் உள்ளது.

No comments:

Post a Comment